Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
ஞானம்
Bairava News

ஞானம்

எந்தக் குறையும் இல்லாத ஆத்மா இந்தக் குறைபாடுகளும் பிரச்சினைகளும் நிறைந்த வாழ்க்கை ஓட்டத்தில் வந்து சிக்கிக் கொள்வது ஏன் என்ற கேள்வி சிந்திக்க முடிந்த மனிதன் மனதில் எழுவது இயற்கை. இதற்கு விடையாக சுவாமி விவேகானந்தர் கிளிக்கதை ஒன்றை அடிக்கடிக் கூறுவதுண்டு.

ஒரு ஜீவ விருட்சத்தின் உச்சியில் இரண்டு கிளிகள் ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தன. இரண்டுமே தெய்வீக ஒளியால் சூழப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. அவற்றிற்கு எந்தக் குறையுமில்லை. எந்தத் தேவையும் இருக்கவில்லை. பேரமைதியுடன் அவை இருந்தன. அந்த விருட்சத்தின் கீழ்பகுதியில் நிறைய பழங்கள் அழகாகப் பழுத்திருந்தன. ஒரு கிளிக்கு அதை சுவைத்துப் பார்க்கும் ஆசை உண்டாயிற்று.

மெல்ல கீழே பறந்து வந்து ஒரு கனியை சுவைத்தது. அந்தக் கனியின் இனிய சுவை அதற்கு மிகவும் பிடித்துப் போகவே அது மேலும் இறங்கி வந்து அந்தக் கனிகளை சுவைக்க ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் இனிய சுவையுடன் கூடிய கனிகளே சுவைக்கக் கிடைத்தாலும் மேலும் கீழே இறங்க இறங்க இனிப்புடன், புளிப்பு, கசப்பு போன்ற விருப்பமில்லாத சுவைகளும் கனிகளில் கிடைக்க ஆரம்பித்தது. மாறி மாறி கிடைத்த சுவைகள் அந்தக் கிளிக்கு மகிழ்ச்சியையும், ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் சேர்த்தே தர ஆரம்பித்தன.

விருட்சத்தில் கீழ்ப்பகுதியிலேயே வசிக்க ஆரம்பித்திருந்த அந்தக் கிளி தன் தெய்வீக ஒளியையும் இழந்து விட ஆரம்பித்திருந்தது. ஒரு கட்டத்தில் அந்தக் கிளி உச்சியில் இப்போதும் வசித்து வரும் அதனுடைய ஜோடிக் கிளியை அண்ணாந்து பார்த்தது. அந்த ஜோடிக் கிளி இப்போதும் அதே தெய்வீக ஒளியுடன் ஜொலித்துக் கொண்டு ஆனந்தமாகவும் நிறைவாகவும் இருந்ததைக் கண்ட கிளிக்கு உண்மை உறைக்க அது மீண்டும் உச்சிக்குச் சென்று அந்த ஜோடிக் கிளியுடன் சேர்ந்திருக்கப் பறந்து சென்றது. ஆனால் அங்கே அதனால் திருப்தியாக இருக்க முடியவில்லை.

கனிகளை சுவைக்கும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புளிப்பும் கசப்பும் மிகுந்த கனிகள் அதிகம் கிடைத்தாலும் இடையிடையே இனிப்பான கனிகளும் கிடைக்கின்றன அல்லவா? அந்த நினைவினை அதனால் அலட்சியப்படுத்த முடியவில்லை.

மேலே இருக்க முடியாத அந்தக் கிளி மறுபடி மறுபடி கீழே வந்து பல வித சுவையுடைய கனிகளைச் சுவைத்து அதற்கேற்ற மனநிலைகளில் இருந்து தவித்தது. அதன் தெய்வீக ஒளி முழுவதுமாக மங்கி இருந்தது. ஆனால் அந்த ஜோடிக் கிளியோ குறையாத ஆனந்தத்துடன் மேலிடத்திலேயே நிறைவுடன் இருந்தது.

இது தான் மனிதனின் நிலை. எதனாலும் பாதிக்கப்படாமல் முழுமையான நிறைவுடன் அவன் ஆன்மா இருக்க அவன் மனமோ அறியாமையில் பொய்யான சுகங்களைத் தேடி தன் நிலையில் இருந்து இறங்கி வந்து சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு விருப்பு வெறுப்பு என்ற இரட்டை நிலைகளில் சிக்கித் தவிக்கிறது. மேலான உண்மைகள் அவனுக்கு அவ்வப்போது புரியாமல் இல்லை. ஆனால் அறியாமையும், பலவீனமும் திரும்பத் திரும்ப அவனைக் கீழே இழுக்கின்றன. இதில் ஆத்மாவின் பங்கு இல்லை.

இதை கர்ம சன்னியாச யோகத்தில் தொடர்ந்து வரும் சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

“ஆத்மாவானது கர்மங்களைச் செய்யத் தூண்டுவதோ, கர்மங்களை உண்டாக்குவதோ இல்லை. கர்ம பலன்களுடன் சேர்த்து வைத்தலையும் செய்வதில்லை. இயற்கையே எங்கும் இயங்குகிறது.

ஆத்மாவானது எவனுடைய பாபத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. புண்ணியத்தையும் எடுத்துக் கொள்வதில்லை. ஞானம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது. அதனால் பிராணிகள் மயக்கமடைந்திருக்கின்றன.

எவர்களுடைய ஞானத்தால் அந்த அஞ்ஞானமானது அழிக்கப்பட்டதோ அவர்களுடைய ஞானம் சூரியனைப் போல் அந்தப் பரம்பொருளைப் பிரகாசிக்கச் செய்கிறது.”

கனிகளில் பல சுவைக் கனிகள் இருப்பது இயற்கை. பார்த்தவுடனேயே சுவை அறிந்து கொள்ள முடிவதில்லை. காட்சிக்கு அழகாக இருப்பவை சுவையிலும் இனிமையாக இருக்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. இதெல்லாம் இயற்கையின் தன்மை. ஆத்மா இந்த இயற்கை தர்மங்களுடன் யுத்தம் செய்வதில்லை. தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுமில்லை. அதனால் அதன் பாவ புண்ணியக் கணக்கையும் அது எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் ஆசை, அறியாமையால் உந்தப்பட்டு சுவைக்க வந்த மனிதனோ அந்த இயற்கையின் தன்மையுடன் பிணைக்கப்பட்ட விளைவுகளையும் சேர்ந்தே அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்த தொடர் விளைவுகளில் சிக்கி கஷ்டப்பட நேர்கிறது.

இதில் ஞானம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டிருக்கிறது என்கிற வாசகம் அறிவுபூர்வமானதா என்று சிலருக்கு சந்தேகத்தை எழுப்பலாம். ஒளி இருக்கும் இடத்தை இருள் நெருங்கவே முடியாத போது ஒளியை இருட்டு எப்படி மூட முடியும்? ஞானமும் அப்படிப் பட்ட ஒளியே அல்லவா? அதை அஞ்ஞான இருட்டு எப்படி மூட முடியும்?

சூரியன் பேரொளியுடன் மின்னிக் கொண்டிருந்தாலும் கூட நாம் கண்களை மூடிக் கொண்டால் பின்பு நாம் இருப்பது இருட்டிலேயே அல்லவா? மலையே எதிரில் இருந்தாலும் கண்ணருகில் இரு விரல்களை வைத்து மறைத்துக் கொண்டால் மலையும் நம் பார்வையில் இருந்து மறைந்து விடும் அல்லவா?

கண்களை ஏன் மூட வேண்டும், விரல்களைக் கண்ணருகில் வைத்துக் கொள்வது எதற்காக? இதெல்லாம் அறியாமையால் நாமே செய்து கொள்ளும் முட்டாள்தனங்கள். இந்த அஞ்ஞானச் செய்கையால் மெய்ஞான சூரியனையும், மலையையும் நாமே மறைத்துக் கொள்கிறோம். பகுத்தறியக் கூடிய அறிவை விட்டு விலகும் போது மனிதன் விலங்காகிறான். மயக்கமடைகிறான். இந்த அஞ்ஞானச் செய்கையை விலக்கிக் கொள்ளும் போது ஞான ஒளியுடன் எல்லாமே பிரகாசித்து உள்ளது உள்ளது போலவே தெரிகிறது.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Yoga Photo's Part - 2
Yoga Photo's Part - 2
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...