Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி?
Bairava News

ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி?

பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத் துர்நிமித்தங்கள் பல தோன்றின.புழுதிக் காற்று உலகையே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது.விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந்தன. சூரியன் ஒளிக்குன்றியவனாய்த் தெரிந்தான். எங்கும் குழப்பமும், அச்சமுமாய் இருந்தது.ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட விருஷ்ணிகளின் வீழ்ச்சி நெருங்கி விட்டது.

ஒரு சமயம் விஸ்வாமித்திரரும்,கண்வரும்,நாரதரும் துவாரகைக்கு வந்தனர். விருந்தினராக வந்த அந்த முனிவர்களைப் பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித் திருக்க வேண்டும்.ஆனால் ஆணவம் தலைக்கேறிய விருஷ்ணிகள் அலட்சிய மாக அம்முனிவர்களிடம் நடந்துக்கொண்டனர். கேலியும், கிண்டலுமாய் அவர்களிடம் பேசினர். ஓர் ஆடவனுக்கு அழகிய வேடமிட்டு, அம்முனிவர்களிடம் அழைத்துச்சென்று ‘இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?’ எனக் கேட்டு நகைத்தனர்.

கந்தல் துணிகளையும் இரும்புத் துண்டுகளையும் சேர்த்து மூட்டையாக வயிற்றில் கட்டிக் கர்ப்பிணிப் பெண்ணாக காட்சி அளித்த ஆடவனைக் கண்ட அவர்கள் சினம் கொண்டனர். ’இவன் ஒரு இரும்பு உலக்கையைப் பெற்றெடுப்பான். அந்த உலக்கையால் கண்ணனும், பலராமனும் தவிர விருஷ்ணி குலம் முழுதும் நாசம் அடையும்’எனச்சாபம் இட்டனர். முனிவர்களின் சாபத்தைக் கேட்ட விருஷ்ணிகள் பயந்து ஓடோடிச் சென்று பலராமனிடமும், கண்ணனிடமும் நடந்ததை கூறினர்.

இரும்புத்துண்டை நன்றாகத் தூள் தூளாக்கிக் கடலில் போடுமாறு பலராமன் அவர்களுக்கு ஆலோசனைக் கூறினார். விருஷ்ணி இளைஞர்களும் அப்படியேச் செய்தனர். தங்களுக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியதாக நினைத்தனர். ஆனால் கண்ணனின் மனநிலை வேறாக இருந்தது. முன்னொரு சமயம் மக்களை பறி கொடுத்த காந்தாரி தமக்கு இட்ட சாபத்தை நினைத்தார்.’நீ நினைத்திருந்தால் குருகுல நாசத்தைத் தடுத்திருக்கலாம். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. எனவே குருவம்சம் அழிந்தது போல உன் விருஷ்ணி வம்சமும் அழியட்டும் என்று அவள் இட்ட சாபத்தை எண்ணி தமது விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.

கண்ணன் வர இருக்கும் ஆபத்தை மாற்ற விரும்பவில்லை.காலத்தின் இயல்பு அது. விருஷ்ணிகளின் ஒழுக்கக்கேடு வரம்பு மீறிச் சென்றது. ஆணவமும், ஆடம்பரமும் அளவு கடந்து சென்றன. பலராமனையும், கண்ணனையும் தவிர மற்ற எல்லாரையும் அவர்கள் அவமானப் படுத்தினர். ஐம்புல இன்பங்களில் எல்லை மீறிச் சென்றனர். குறிப்பாகக் காமக் களியாட்டத்தில் பெரிதும் ஈடுபட்டனர். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்தனர்.

சாபம் பலிக்கும் காலம் வந்து விட்டது. கடலுக்குள் போடப்பட்ட இரும்புத்தூள்கள் கரையோரத்தில் ஒதுங்கி நாணல்களாக வளர்ந்திருந்தன. குடித்து விட்டுக் கேளிக்கைகளில் ஈடுபட்ட விருஷ்ணிகள் அக்குடிவெறியில் ஒருவரோடு ஒரு வர் சர்ச்சையில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் அடிக்கத் தொடங்கினர். கடற் கரையில் வளர்ந்திருந்த நாணல்கள் அனைத்தும் முனிவர்கள் இட்ட சாபத்தால் உலக்கைகளாக மாறியிருந்தன. விருஷ்ணிகள் உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். தந்தையென்றும், மகன் என்றும் உறவு என்றும் பாராது கடுமையாக இரும்பு உலக்கையால் அடித்துக் கொண்டு மாண்டனர்.

காலத்தின் போக்கை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணன். மண்ணுலகில் தன் வேலை முடிந்து விட்டது என எண்ணினார். பலராமன் தன் உடலை ஒழித்து விட்டுப் பரத்தில் ஐக்கியமானார். கண்ணனும் தன் உடலை மாய்க்கக் கருதினார். காந்தாரி முன்னர் இட்ட சாபத்தை நினைத்துப் பார்த்தார். இப்போது தமது உத்தம உலகை அடையும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தார். கண்ணன் ஐம்புலன்களையும் அடக்கி யோக நித்திரையில் ஆழ்ந்தார். அதனை உணராது ஏதோ விலங்கு என எண்ணி ஜரன் என்னும் வீரன் அம்பை எய்தினான்.கூரிய முனையை உடைய அந்த அம்பு கண்ணனின் இகலோக வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது. முனிவர்கள் தொழ..ஜோதி உலகு எங்கும் பரவி ஆகாயம் நோக்கிச் செல்ல தம் உலகை அடைந்தார் கண்ணன். அவரை அங்கு இந்திரனும், அஸ்வினி தேவர்களும், ருத்ரர்களும், வசுக்களும், சித்தர்களும், முனிவர்களும் தாழ்ந்து பணிந்து வரவேற்றனர்.

தாருகன் அஸ்தினாபுரம் சென்று விருஷ்ணிகளும், போஜர்களும், அந்தகர்க ளும் மாண்ட செய்தியை தெரிவித்தான். உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர் என்ற செய்தி அறிந்து அஸ்தினாபுரம் திடுக்கிட்டது. கண்ணனைக் காணலாம் என்று வந்த அர்ச்சுனன் ஏமாற்றம் அடைந்தான். அவன் அங்கு வரும் முன் பரமாத்மா தனது உலகமான பரலோகத்தை அடைந்து விட்டார். துவாரகை மயான பூமியாய் காட்சி அளித்தது.

கண்ணன் இல்லாத துவாரகையையும், கணவனை இழந்து துடிக்கும் பெண்களையும் கண்ட அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான். பார்த்தனைப் பார்த்த ருக்மணியும் சத்யபாமாவும் ‘ஓ’வென கதறி அழுதனர். மயங்கி வீழ்ந்தவன் மயக்கம் தெளிந்ததும் யாவரும் ஒன்றும் பேசாது மௌனமாக நின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அர்ச்சுனன் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டான். பலராமர், கண்ணன் ஆகியோர் சடலங்களைக் கண்டெடுத்து எரியூட்டி ஈமச்சடங்குகளை முறையாக செய்து முடித்தான்.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Foundation Gallery
Foundation Gallery
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...