Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
சந்திரன் செய்த பாவம்
Bairava News

சந்திரன் செய்த பாவம்  

சந்திரனின் தோற்றம்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காகவும் இன்னும் பல செல்வங்களுக்காகவும் திருப்பாற்கடலைக்  கடைந்தனர் ,அதிலிருந்து பல அரிய பொருட்கள்  தோன்றின .ஆலகாலம் ,மூதேவி ,ஸ்ரீதேவி ,காமதேனு,நவநிதி புஷ்பகவிமானம் ,வெள்ளையானை, வெள்ளைக்குதிரை ,நீலமணி பாரிஜாதம்,,காமதேனு ,அமிர்தம் இவைகளுடன் சந்திரன் மிகவும் பிரகாசத்துடன் தோன்றினான்.வடமொழியில் சந்த்ர  என்றால் பிரகாசம் என்று பொருள் . சந்திரனின் பிரகாசம் தேவர்களின் கண்களைக்  கூச வைத்தது. சந்திரனை ஒரு கிரகமாக அறிவித்து அதனை சிவன் தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரானார் .சந்திரன் மிகவும் இளமையானவன்  அழகானவன் .

சந்திரனுடன் தொடர்புடையவை .

  • நிறம் --வெள்ளை
  • உலோகம் --வெள்ளி
  • தான்யம் ---அரிசி
  • ரத்னம் --முத்து
  • திசை --வடமேற்கு
  • திரவம் --நீர்
  • பருவம் --குளிர்காலம்
  • நாள் ---திங்கள்
  • வாகனம் --மான்

சந்திரனின் மற்ற பெயர்கள்

  • திங்கள்    / சோமன் -சோமவாரத்திற்கு (திங்கட்கிழமை ) அதிபதி. சோமனை தன் தலையில் அணிந்ததால் சிவன் சோமசுந்தரர் ஆனார்.
  • ரஜனிபதி --இரவிற்கு அதிபதி
  • சுகுபராக --இரவிற்கு வெளிச்சத்தை தருபவன்
  • இந்து ---பிரகாசத்துளி
  • மதி   --நிலவு

 மூளை ,மனது ,எண்ணங்கள் ,கற்பனைகள் , உணர்ச்சிகள் மற்றும்  மிருதுத்தன்மை போன்ற செயல்களுக்கு சந்திரன்  காரணமாகிறான் .மேலும் நட்சத்திரங்களாகிய  ரோகினி ,ஹஸ்தம் மற்றும் சிரவணத்திற்கு அதிபதி.வடமொழியில் சோம  என்றால் தாவரங்களின் சாறு என்று பொருள். எனவே அவன் செடி ,கொடி மரங்களுக்கு அதிபதியாகவும்ஆகிறான் . வானவெளியில் உள்ள கிரகங்களில் இவன்  ஒரு சுபக்கிரகமாக கருதப்பட்டு மனமகிழ்ச்சிக்கும் செல்வங்களுக்கும் உரியவனாகிறான் .

மற்றவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சந்திரனின் வாழ்க்கை  மகிழ்ச்சியானதாக இல்லை.

சந்திரன் ஒரு பத்ம ஆண்டு (பல கோடி ஆண்டுகள்  ) தவம் செய்து பிரம்மனின் அருளைப் பெற்று விதைகள் ,செடிகொடிமரங்கள் மற்றும் சமுத்திரங்களுக்கு அதிபதியானான். பிரஜாபதி தட்சனின் இருபத்தியேழு பெண்களை (நட்சத்திரங்கள் )மணந்து கொண்டான் .தனது புகழ் கீர்த்தி ,மரியாதையை நிருபிக்க சந்திரன் ஒரு ராஜசூய யாகத்தை நடத்தினான்.யாகத்தை சிறப்பாக  நடத்தியதால் மமதை தலைக்கேறியது.ஆணவம் கண்களை மறைத்தது .மனது அறிவு சொன்னபடி கேட்க மறுத்தது .அதனால்தான்,

தன் குலகுருவான பிரகஸ்பதி மனைவி தாரையை  அபகரித்துச்  சென்று வாழ்க்கை நடத்தி அவளைக்  கருவுறச் செய்தான் .தேவர்களும் கடவுளர்களும் குருவும் கேட்டுக்கொண்டபிறகும் அவன் தாரையை அனுப்ப மறுத்தான்.எனவே தேவர்கள் சந்திரனின் மீது படையெடுத்தனர் .தேவர்கள் சார்பில் சிவனும் குரு பிரகஸ்பதியும் முன்னின்று போரை நடத்தினர். சந்திரனுக்கு உதவியாக அசுரர்களும் ,அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரும் சேர்ந்து கொண்டனர் .போர் மிகவும் பயங்கரமாக நடந்தது.போருக்கு "தாரகாமய சங்கிராமம் "என்று பெயரும் வைக்கப்பட்டது.இரு தரப்பிலும் பலம் சரிசமமாக இருந்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை.எனவே பிரம்மன் இருதரப்பினரிடமும் சமாதானம் பேசி தாரையை சந்திரனிடமிருந்து பிரித்து பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார்.ஆனால் பிரகஸ்பதியோ "தாரை கர்ப்பமாக இருக்கிறாள் "எனவே என்னால்தற்போது  தாரையை ஏற்றுக்கொள்ளமுடியாது "என்று கூறி அக்கருவை விட்டுவிட்டு வருமாறு தாரையிடம் கூறினார்.தாரையும் அக்கருவை ஒரு மரத்தின் நிழலில் விட அது மிகுந்த பிரகாசத்துடனும் அழகுடனும் ஒரு சிறுவனாக மாறியது.அதனைக்கண்ட தேவர்கள் மிகவும் வியப்புற்று தாரையை நோக்கி இந்தக் குழந்தை யாருடையது என்று கேட்க அவள் அக்குழந்தை சந்திரனுடையது என்று சொன்னாள்.எனவே சந்திரன் தனக்கும் தன் குருவின் மனைவி  தாரைக்கும் பிறந்த குழந்தைக்கு புதன் என்று நாமகரணம் சூட்டினான் .இப்படியாக புதன் பிறந்தான்.

குருவின் மனைவியையே அபகரித்துச் சென்று அவளுடன் வாழ்க்கை நடத்தி குழந்தையும் பெற்றுக்கொண்டதால் சந்திரன்  புராணங்களில் குருதுரோகி என்று அழைக்கப்படுகிறான்.குருவுக்கு துரோகம் செய்த முதல் சிஷ்யனுமாகிறான்.

மாமனாரின் சாபம்

பிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள். அவர்களில்பத்துபேரை தருமனுக்கும் பதின்மூன்று பேரை காசிபருக்கும் இருபத்தேழு   நட்சத்திரப்பென்களை சந்திரனுக்கும் ,மீதிப் பெண்களை ஆங்கீசர் ,அரிஷ்டநேமி ,கிரிஷஷ்வர் வாஹுபுத்திரர்க்கு  திருமணம் செய்து வைத்தான்.தட்சன் தன் இருபத்தியேழு  நட்சத்திரப் பெண்களை (அஷ்வினி முதல் ரேவதி வரை )சந்திரனுக்கு திருமணம் செய்கையில் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு  பெண்களையும் சமமாகப் பாவித்து அனைவரிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் .சந்திரனும் அதற்கு சம்மதித்து திருமணம் செய்து கொண்டான்.திருமணம் நடந்த புதிதில் சந்திரன் எல்லோரிடமும் அன்பாகவே நடந்து கொண்டான்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் ரோஹிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி மற்றவர்களை வெறுக்கத் தொடங்கினான்.இதனால் கோபம் கொண்ட மற்ற இருபத்தாறு  மனைவிகளும் சந்திரனின் மீது கோபமும் ரோகிணியிடம் பொறாமையும் அசூசையும் கொண்டு தங்களது தகப்பனாரிடம் முறையிட்டனர்.இதைக்கேட்ட தட்சன், சந்திரன் அவனது வாக்குறுதியை மீறுவதைப் பார்த்து தன் மக்களின் நிலை கண்டு வருத்தமும் கோபமும் கொண்டான்.தன் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்த்த தட்சன் கோபம் அதிகரித்தது.கோபம் கொண்ட தட்சன், சந்திரனுடைய கலைகள் படிப்படியாய் தேய்ந்து போகும் என்று சாபம் கொடுத்தான்.இப்படியாக சந்திரன் தனது  தவறுகள்  காரணமாகவும்,தனது வாக்குறுதியை மீறியதனாலும்,  மனைவிமார்களின் புகாரின் அடிப்படையில் தட்சனின் சாபம் பெற்று தனது கலைகளை இழக்க ஆரம்பித்தான் .

சந்திரன் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கிய சந்திரன் தேவர்களிடம் முறையிட அவர்கள் அவனை பிரமனிடம் அழைத்துச்  சென்றனர்.பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார் .சந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்து மிருத்யுஞ்ச மந்திரத்தை உச்சரித்து வணங்கினான்.சந்திரன் செய்த பூசையைக் கண்டு மகிழ்ந்த சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சந்திரனும் தனது மாமனாரின் சாபத்தால் தனக்கு ஏற்பட்ட நிலையை எடுத்துச்சொன்னான். அதற்கு சோமசுந்தரேஸ்வரர் தட்சன் கொடுத்த சாபத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும் அந்த சாபத்திலிருந்து சந்திரன் தப்பவும்  முடியாது என்று கூறினார் .ஆனால் சந்திரன், இறைவனிடம் நெக்குருகி ,நெஞ்சுருகி கண்ணீர்மல்கி இறைஞ்சி தான் செய்த தவறுகளை மன்னித்து தனக்கு அருள் புரிந்து கருணை காட்டுமாறு கேட்டுக்கொண்டான்.சந்திரனின் பக்தியில்/ வேண்டுகோளில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்டார்.எனவே ,ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து(தட்சனின் சாபப்படி ) மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்தார்.இவ்வாறாக சந்திரன் தன் இழந்த காந்தியைப் பெற்றான்.

திருப்பாற்கடலில் இருந்து தோன்றும் போது தேவர்களின் கண்களைக்  கூச வைக்கும் அளவிற்கு பிரகாசமாய் இருந்த சந்திரன் தன் ஒளியை இழந்ததிற்கு காரணம் தட்சனின் பெண்கள்.அதைப் போலவே சந்திரன் தன் மதிப்பையும் மரியாதையையும் தேவர்கள் மத்தியில் இழந்ததற்கு காரணம் தன் குருவின் மனைவி தாரையை அபகரித்து அவளைத் தாயாக்கியது.இதை வைத்தே சந்திரன் கெட்டது பெண்ணாலே என்ற பழமொழி உருவாயிற்று.இவனைப் போலவே இந்திரனும் பெண்களாலே கெட்டதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.ஆனால் உண்மையில் இந்திரனும் சந்திரனும் கெட்டது பெண்களால் அல்ல. அவர்கள் செய்த மாபெரும் தவறுகளும் மனக்குதிரையைக்கட்டுப்படுத்த முடியாததாலுமே  தவிர பெண்கள் காரணம் அல்ல என்பதே உண்மையிலும்  உண்மை.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Foundation Gallery
Foundation Gallery
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...