Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
சிம்மம்-ராகு- கேது பலன்கள் 2016-2017
Bairava News

வருகிற ஜனவரி 8ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.இப்போது கன்னி ராசியில் இருக்கும் ராகு சிம்மம் ராசிக்கு வருகிறார் .கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..ராகு கேது பின்னோக்கிதான் பெயர்ச்சியாவார்கள்…8.1.2016 முதல் 27.7.2017 வரை யான பலன்கள் .ராகுவை போல கொடுப்பார் இல்லை.கேதுவை போல கெடுப்பார் இல்லை என்பார்கள் …ராகு கேதுக்கள் நிழல் கிரகம்..சொந்த வீடுகள் இல்லையென்றாலும்…சூரியன்,சந்திரனையே முடக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ..

சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வருகிறது அல்லவா…அது ராகு கேதுக்களின் ஆதிக்கம் தான் ஜோதிடம் சொல்கிறது.அது பூமியின் நிழல் என அறிவியல் சொல்கிறது ஜோதிடமும் ராகு கேதுக்களை நிழல் கிரகங்களாகவே பார்க்கிறது.ஜாதகத்தில் லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்தால் நாகதோசம் என்கிறோம்…இவர்களுக்கு நடுவில் கிரகங்கள் மாட்டிக்கொண்டால் காளசர்ப்ப தோசம் என்கிறோம்.இவை இரண்டும் மிக கடுமையான தோசங்கள் ஆகும்.கணவன்/மனைவி ஸ்தனத்தையே கெடுத்து மோசமான குணமுள்ள கணவன்/மனைவி அமைய செய்துவிடும் வல்லமை கொண்டவை.இதற்காக என் வாடிக்கையாளர்களுக்கு திருமணம் எப்போது ஆகும் எனக்கேட்டு வருவோருக்கு சூட்சுமமான பரிகாரம் சொல்லி விரைவில் திருமணம் நடக்க நல்ல குணமுள்ள வாழ்க்கை துணை அமைய புத்தகங்களில் வரும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை..ராகு கேதுக்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு எத்தனால் இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் கெட்டுவிடும் என்பது ஜோதிட விதி.உதாரணமாக ராகு எட்டாம் இடத்தில் இருந்து ராகு திசை நடந்தால் பாம்பு பலமுறை கண்ணில் படும்.கடிக்கவும் செய்யும்.விச உணவுகள் சாப்பிட்டு உயிர் விடவும் நேரலாம்..எட்டு ஆயுள் ஸ்தானம் என்பதால் நஷ்டம் உயிருக்கா,பொருளுக்காக என கேள்வி வந்துவிடும்.சொத்துக்கள் இருப்பின் உயிருக்கு பங்கம் வந்து விடும்.சுபர்களுடன் கூடி இருந்தால் அவ்வளவு பாதிக்காது.ராகு ஏழில் இருந்து திசை நடத்தினால் சுபர் பார்க்காவிடில் திருட்டு குணம் உடைய ,குடும்ப பெயரை முழுவதும் கெடுத்து விடக்கூடிய வாழ்க்கை துணை அமைந்து விடும்…


இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என பார்ப்போம்

 

சிம்மம்
சிம்மம் ராசியினருக்கு ராசியிலியே ராகு வருகிறார்…கேது ஏழாம் இடத்துக்கு வருகிறார் .போனமுறை தன ஸ்தானம்,குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து கடன் தொல்லை ,குடும்பத்தில் நிம்மதி யின்மை உண்டாக்கினார் இப்போது ராகு தன ஸ்தானத்தை விட்டு நகர்ந்ததே பெரிய யோகம்தான்.அந்த அடிப்படையில் இந்த ராகு கேது பெயர்ச்சி நல்லதே செய்யும்.
இருந்தாலும்,இது நாகதோசம் அடிப்படையில் ராசிப்படி அமைகிறது .இது சுமாரான பலன்களையே தரும் உங்கள் ராசியில் சந்திரனுடன் ராகு சேர்வதல் சந்திர கிரகணம் போலத்தான்.மனதில் குழப்பம்,சோர்வு,கவலை அதிகரிக்க செய்யும் என்பதால் வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் அமைதியாக அம்ர்ந்து விட்டு வாருங்கள்..கடன் தொல்லை தீரும்,.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.இரவு பயணங்களை தவிர்க்கவும்.

பரிகாரம் :

 

                  அருகில் உள்ள அறுபது வயதை கடந்த பெரியவர்கள் , சதாபிஷேகம் கண்ட தம்பதியரிடம் இது போன்று ஆசிர்வாதம் பெறுவதும், ராகு கேது கிரகங்கள் நன்மையான பலனை தருவதற்கு வழி வகுக்கும் , குறிப்பாக அறுபது வயதை கடந்த பெரியோர்கள் அனைவரிடமும் , ராகு கேதுவால் பாதிக்க பட்டவர்கள் ஆசி பெரும் பொழுது சகல நன்மைகளையும் ராகு கேது கிரகம் தர தவறுவதில்லை.திருமண வாழ்க்கை சரியாக அமையாதவர்கள் , திருமண தடையுள்ளவர்கள் ,குழந்தை பாக்கியம் அற்றவர்கள் , ஜாதக ரீதியாக ராகு கேது கிரகங்களால் அதிகம் பாதிக்க படும் நிலையில் உள்ளவர்களுக்கு , இந்த வழிமுறை விரைவில் பலன் தருகிறது என்பது கண்ணெதிரே கண்ட உண்மை .

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Foundation Gallery
Foundation Gallery
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...