Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
ஓம்" என்னும் ப்ரணவ மந்திரம்
Bairava News

"ஓம்" என்னும் ப்ரணவ மந்திரம் 
"ஓம்" என்னும் ப்ரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை, மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது..
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். 
ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.
முருகப்பெருமான் ப்ரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, "என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.
ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது.
கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.
நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன அமைதி கிடைக்கும். வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவந்தான்.
ஓம் என்ற பிரணவன் “அ” என்பது எட்டும் “உ”என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
” உ ‘ எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. ” ம் ‘ ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் ” ஓம் ” என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96. மனிதவுடலான பிண்டமும், பரவெளியான அண்டமும் இந்தத் 96 தத்துவங்களுக்குள் அடக்கம்.

இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Temple Under Construction
Temple Under Construction
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...