Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
நவராத்திரி வழிபாடு :
Bairava News

நவராத்திரி வழிபாடு :

புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியையே அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தினை சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.

சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.

நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.

தேவர்களுக்கு பகல் நேரமாக இருப்பது நமக்கு இரவு நேரமாகும். ஆகவே இரவு நேரத்தில் தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவகன்னிகா வழிபாடு

நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.

அதன்படி,

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி

இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி

மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி

நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோகிணி

ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா

ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா

ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி

எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்க்கா

ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - சுபத்ரா

என்று வணங்கப்படுவார்கள்.

புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.

முதல் (1,2,3) மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.

இடை மூன்று (4,5,6) நாட்கள் லட்சுமி வழிபாடு.

கடை மூன்று நாட்கள் (7,8,9) சரஸ்வதி வழிபாடு.

துர்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ''கொற்றவை'', ''காளி'' என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ' நவராத்திரி ' எனப்படும். அவனை வதைத்த பத்தாம் நாள் 'விஜயதசமி' [ விஜயம் மேலான வெற்றி].

நவதுர்க்கை: வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, சூரி துர்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மகா இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி, கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்மபிரியை. ஞான சக்தி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி" என்று குறிப்பிடுகிறது.

சரஸ்வதி பூஜை :

நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் - திருவோணம் அன்றே விஜயதசமி.

சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூTப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.

விஜய தசமி:

ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி

ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.

துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.

இலட்சுமி: 4. மகாலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.

சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம்.

ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை.

நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் பல கன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
School Function 2010
School Function 2010
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...