Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை
Bairava News

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை:
ஆலயம்  = ஆ + லயம் . ஆ-ஆண்டவன், நம்மை ஆட்கொண்டவர் ; லயம்-லகித்து ,ஒன்றி வழிபடும் இடம்  .
கோயில் = கோ + இல்.  கோ –அரசன்(இறைவன்)  ; இல்- குடி கொண்டு இருப்பவன்.    
                   உலகத்தில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான அன்பு உள்ளங்களுக்கு நாம் சிவனால் படைக்கப்பட்டதாக வேத சாத்திரங்களில் சொல்லபடுகிறது.எனவே சிவனை வழிபட்டு அவரது அருளையும், ஆசியையும் பெற, தினமும் அவர் விரும்பும் திருவாசகத்தை தங்களால் இயன்ற அளவு படித்து(ஓதி) பயன்பெற முயலுங்கள்.சிவ ஆலயத்திற்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.பழங்காலத்து கோயில்கள்,சித்தர்கள்,மகரிஷிகள் பிரவேசித்த கோயில்கள், ,அப்பர்-சுந்தர்-திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் இவர்களால் பாடப்பட்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது சாலச் சிறந்தது.
தமிழ்நாட்டில் பழமையான ஆலயங்கள் 39,000 இருக்கின்றன;இதில் சரிபாதி சிவாலயங்களாக இருக்கின்றன.
நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய பாரம்பரிய நடைமுறைகள்:
தினந்தோறும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிப்பட்ட பின்னரே, மற்ற காரியங்களை தொடங்குவது என்பது நடைமுறையில் இருந்தது. ஏழு வயதிற்குள் நமது குழந்தைகளை அடிக்கடி பழமையான ஆலயங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.அதன்பிறகு அவர்களுக்கு பக்தி உணர்வை ஊட்டுவது ,ஆன்மீகத்தை வளர்ப்பது எளிதாகிறது.
பெற்றோர்,குரு,குழந்தைகள்,இறைவன்-இவர்களில் யாராவது ஒருவரை சந்திக்கச் சென்றாலும், வெறும் கையோடு போய் பார்க்கக் கூடாது என்பது நமது இந்து தர்மத்தின் சம்பிரதாயம்;
பெரும்பாலான சிவாலயங்களுக்குள் பசுமடம் அமைக்கப்பட்டிருக்கிறது;எனவே,வாழைப்பழங்கள் அல்லது அகத்திக்கீரை வாங்கிச் செல்வது அவசியம்,அங்குள்ள பசுவிற்கு அதை கொடுத்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
ஆண்கள் எனில்,மேலாடையைத் தவிர்த்துவிட்டு,சிவாலயத்தினுள் நுழைவது அவசியம்;ஒவ்வொரு நாளுமே மஞ்சள் நிற வேட்டியை அணிந்து கொண்டு செல்வது நன்று;
கோவில் வாசலில் துவார(வாசல்) பாலகராக விநாயகர் அருள்பாலித்துக் கொண்டு இருப்பார்;அவரை மனப்பூர்வமாக வழிபட்டுவிட்டு,கோவிலினுள் நுழைவது முறை;
விநாயகரை வழிபடும் போது,மனதினுள் அவரது காயத்ரி மந்திரத்தையோ அல்லது அகவலையோ மனதிற்குள் பாடுவது அவசியம்;
“ஓம் ஏக தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோஹ் தந்தி ப்ரதோசதயாத்”
என்பது விநாயகர் காயத்ரி மந்திரம் ஆகும்:
“ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
என்பது விநாயகர் அகவல் ஆகும்;
இதுவும் சொல்லிக்கொள்ள இயலாதவர்கள் “ஓம் கணபதியே போற்றி” என்று ஒன்பது முறை சொன்னாலும் போதுமானது;
கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது,அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்;அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பன்னிரெண்டு முறை சொல்லிவிட்டு,கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்;கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்;அங்கே வடக்கு நோக்கி விழுந்து கும்பிட வேண்டும்;இப்படிச் செய்வதால் நம்மிடம் அதுவரை இருந்து வந்த அனைத்து தீய எண்ணங்களையும் அந்த பலிபீடத்தில் பலியிடுவதாக ஐதீகம்;பலிபீடத்தில் விழுந்து வணங்கியப் பின்னர்,ஒருபோதும் கோவிலுக்குள்ளே எந்த இடத்திலும் விழுந்து வணங்கக் கூடாது;மேலும்,சிவாலயத்தினுள் இறைவனைத்தவிர,வேறு எவரையும் வணங்கக் கூடாது; செல்போன் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;
சிவனை வழிபடுவதற்கு முறைப்படி நந்திபகவானிடம் அனுமதி கோர வேண்டும்;நந்தி பகவானை வழிபடுவதன் மூலமாக இந்த அனுமதி நமக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம்;
ஓம் ஏகதத்புருஷாய வித்மஹே

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை:

ஆலயம்  = ஆ + லயம் . ஆ-ஆண்டவன், நம்மை ஆட்கொண்டவர் ; லயம்-லகித்து ,ஒன்றி வழிபடும் இடம்  .

கோயில் = கோ + இல்.  கோ –அரசன்(இறைவன்)  ; இல்- குடி கொண்டு இருப்பவன்.    
                   உலகத்தில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான அன்பு உள்ளங்களுக்கு நாம் சிவனால் படைக்கப்பட்டதாக வேத சாத்திரங்களில் சொல்லபடுகிறது.எனவே சிவனை வழிபட்டு அவரது அருளையும், ஆசியையும் பெற, தினமும் அவர் விரும்பும் திருவாசகத்தை தங்களால் இயன்ற அளவு படித்து(ஓதி) பயன்பெற முயலுங்கள்.

சிவ ஆலயத்திற்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.பழங்காலத்து கோயில்கள்,சித்தர்கள்,மகரிஷிகள் பிரவேசித்த கோயில்கள், ,அப்பர்-சுந்தர்-திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் இவர்களால் பாடப்பட்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது சாலச் சிறந்தது.

தமிழ்நாட்டில் பழமையான ஆலயங்கள் 39,000 இருக்கின்றன;இதில் சரிபாதி சிவாலயங்களாக இருக்கின்றன.
நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய பாரம்பரிய நடைமுறைகள்:
தினந்தோறும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிப்பட்ட பின்னரே, மற்ற காரியங்களை தொடங்குவது என்பது நடைமுறையில் இருந்தது. ஏழு வயதிற்குள் நமது குழந்தைகளை அடிக்கடி பழமையான ஆலயங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.அதன்பிறகு அவர்களுக்கு பக்தி உணர்வை ஊட்டுவது ,ஆன்மீகத்தை வளர்ப்பது எளிதாகிறது.

பெற்றோர்,குரு,குழந்தைகள்,இறைவன்-இவர்களில் யாராவது ஒருவரை சந்திக்கச் சென்றாலும், வெறும் கையோடு போய் பார்க்கக் கூடாது என்பது நமது இந்து தர்மத்தின் சம்பிரதாயம்;

பெரும்பாலான சிவாலயங்களுக்குள் பசுமடம்

அமைக்கப்பட்டிருக்கிறது;எனவே,வாழைப்பழங்கள் அல்லது அகத்திக்கீரை வாங்கிச் செல்வது அவசியம்,அங்குள்ள பசுவிற்கு அதை கொடுத்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

ஆண்கள் எனில்,மேலாடையைத் தவிர்த்துவிட்டு,சிவாலயத்தினுள் நுழைவது அவசியம்;ஒவ்வொரு நாளுமே மஞ்சள் நிற வேட்டியை அணிந்து கொண்டு செல்வது நன்று;

கோவில் வாசலில் துவார(வாசல்) பாலகராக விநாயகர் அருள்பாலித்துக் கொண்டு இருப்பார்;அவரை மனப்பூர்வமாக வழிபட்டுவிட்டு,கோவிலினுள் நுழைவது முறை;
விநாயகரை வழிபடும் போது,மனதினுள் அவரது காயத்ரி மந்திரத்தையோ அல்லது அகவலையோ மனதிற்குள் பாடுவது அவசியம்;
“ஓம் ஏக தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோஹ் தந்தி ப்ரதோசதயாத்”
என்பது விநாயகர் காயத்ரி மந்திரம் ஆகும்:
“ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
என்பது விநாயகர் அகவல் ஆகும்;

இதுவும் சொல்லிக்கொள்ள இயலாதவர்கள் “ஓம் கணபதியே போற்றி” என்று ஒன்பது முறை சொன்னாலும் போதுமானது;

கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது,அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்;அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பன்னிரெண்டு முறை சொல்லிவிட்டு,கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்;கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்;

அங்கே வடக்கு நோக்கி விழுந்து கும்பிட வேண்டும்;இப்படிச் செய்வதால் நம்மிடம் அதுவரை இருந்து வந்த அனைத்து தீய எண்ணங்களையும் அந்த பலிபீடத்தில் பலியிடுவதாக ஐதீகம்;பலிபீடத்தில் விழுந்து வணங்கியப் பின்னர்,ஒருபோதும் கோவிலுக்குள்ளே எந்த இடத்திலும் விழுந்து வணங்கக் கூடாது;மேலும்,சிவாலயத்தினுள் இறைவனைத்தவிர,வேறு எவரையும் வணங்கக் கூடாது; செல்போன் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;

சிவனை வழிபடுவதற்கு முறைப்படி நந்திபகவானிடம் அனுமதி கோர வேண்டும்;நந்தி பகவானை வழிபடுவதன் மூலமாக இந்த அனுமதி நமக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம்;

இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
School Function 2007-2008
School Function 2007-2008
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...