Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Events << BACK
Short Discription :
குரு பெயர்ச்சி பலன்கள் -தனுசு
Events Details

 

குரு பெயர்ச்சி பலன்கள் - 2015
தனுசு: இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு இப்பொழுது ராசிக்கு 9ம் இடத்திற்கு மாற இருக்கிறார். உங்கள் ராசி நாதனான குருவே உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும் நல்லது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பார்கள். ஏற்கனவே ராசிக்கு 8ல் குரு இருந்த காலம் ராசிநாதனே அஷ்டமத்தில் மறைந்ததால் சிலருக்கு விபத்து வைத்திய செலவு,வேலையில் பிரச்சனை,ஓய்வு ஓழிச்சல் இல்லாத உழைப்பு, உழைத்தும் பெருமையில்லை,எதிர்பார்த்த காரியங்கள் கை கூடாமை,போன்ற தீய பலன்களைத் தந்து ஏமாற்றங்களை தந்தது. 9ல் இடத்து குரு கஷ்டங்களை போக்குவார்.கண்ணீரைத் துடைப்பார் ஆறுதலை தருவார்.குருவருளும் திருவருளும் வழி நடத்தும். கும்பிடபோன தெய்வம் ஏதிரே வந்து உதவி செய்யும். உங்கள் ராசி நாதன் குரு 5ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க போவதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். கண்டபடி கை நீட்டிய இடமெல்லாம் கடனை வாங்கி அசலும் அடைக்க முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் தலை குனிந்தவர்கள் எல்லாம் இனி தலை நிமிர்ந்து நடக்கலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. குரு தன் 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் மிடத்தை பார்க்கப் போவதால் உங்கள் கஷ்ட நிலைகள் மாறும் பொருளாதார நெருக்கடி நீங்கும், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும், உங்களை அலட்சிய படுத்தியவர்கள் எல்லாம் வலிய வந்து நலம் விசாரிப்பார்கள். தங்கள் சுய நலத்திற்க்காக சில சுய நலவாதிகள் உங்களை நாடி வருவார்கள். இனிமேல் வசதியும்,யோகமும் அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும் பொழது ஆசையுள்ளவர்கள் தேடி வருவது இயற்கைதானே. ஏழரை சனி நடப்பதால் இருக்கிற உத்தியோகத்தில் கவனம் தேவை கொள்ளுங்கள், புதிய முயற்சிகளை தள்ளி போடுங்கள்.கூட்டு தொழிலில் கவனமாக இருங்கள். உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு காலதாமதம் ஆகலாம் ஆனால் அவை அனைத்தும் வெற்றி பெரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் - 2015


தனுசு:

இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு இப்பொழுது ராசிக்கு 9ம் இடத்திற்கு மாற இருக்கிறார். உங்கள் ராசி நாதனான குருவே உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும் நல்லது.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பார்கள். ஏற்கனவே ராசிக்கு 8ல் குரு இருந்த காலம் ராசிநாதனே அஷ்டமத்தில் மறைந்ததால் சிலருக்கு விபத்து வைத்திய செலவு,வேலையில் பிரச்சனை,ஓய்வு ஓழிச்சல் இல்லாத உழைப்பு, உழைத்தும் பெருமையில்லை,எதிர்பார்த்த காரியங்கள் கை கூடாமை,போன்ற தீய பலன்களைத் தந்து ஏமாற்றங்களை தந்தது.

9ல் இடத்து குரு கஷ்டங்களை போக்குவார்.கண்ணீரைத் துடைப்பார் ஆறுதலை தருவார்.குருவருளும் திருவருளும் வழி நடத்தும். கும்பிடபோன தெய்வம் ஏதிரே வந்து உதவி செய்யும்.

உங்கள் ராசி நாதன் குரு 5ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க போவதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம்.

கண்டபடி கை நீட்டிய இடமெல்லாம் கடனை வாங்கி அசலும் அடைக்க முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் தலை குனிந்தவர்கள் எல்லாம் இனி தலை நிமிர்ந்து நடக்கலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு.

குரு தன் 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் மிடத்தை பார்க்கப் போவதால் உங்கள் கஷ்ட நிலைகள் மாறும் பொருளாதார நெருக்கடி நீங்கும், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும், உங்களை அலட்சிய படுத்தியவர்கள் எல்லாம் வலிய வந்து நலம் விசாரிப்பார்கள். தங்கள் சுய நலத்திற்க்காக சில சுய நலவாதிகள் உங்களை நாடி வருவார்கள். இனிமேல் வசதியும்,யோகமும் அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும் பொழது ஆசையுள்ளவர்கள் தேடி வருவது இயற்கைதானே.

ஏழரை சனி நடப்பதால் இருக்கிற உத்தியோகத்தில் கவனம் தேவை கொள்ளுங்கள், புதிய முயற்சிகளை தள்ளி போடுங்கள்.கூட்டு தொழிலில் கவனமாக இருங்கள்.

உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு காலதாமதம் ஆகலாம் ஆனால் அவை அனைத்தும் வெற்றி பெரும்.

 

பரிகாரம்:

 

இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும். பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வதும், திருச்செந்தூர் சென்று கடலில் ஸ்நானம் செய்து முருகப் பெருமானை வழிபாடு செய்வதும் வியாழன் கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைகடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழி பட்டு வந்தால் நல்ல பலன்கள் விரைவாகவும் அதிகமாகவும் நடை பெற உதவும் மேலும் தீய பலன்கள் பெரும் பாதிப்பு தராமல் காப்பாற்றிக் கொள்ள உதவும். அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகள். அனைத்து ராசி அன்பர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையில் விருத்தியையும் வளத்தையும் வழங்குவதற்கு வாழ்த்துகள்.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 07.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 07.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 06.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 06.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 04.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 04.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 03.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 03.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 02.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 02.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Yoga Photo's Part - 1
Yoga Photo's Part - 1
மேலும் ...
வீடியோ படங்கள்
cancer video
cancer video
cancer video
temple
cancer
temple
மேலும் ...