Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
பைரவ வழிபாடு
Bairava Newsபைரவ வழிபாடு:சிவனின் சொரூபங்களில் - சரபேசரும்,  பைரவரும் - உங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவர். 

பைரவ வழிபாடு:சிவனின் சொரூபங்களில் - சரபேசரும்,  பைரவரும் - உங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவர். 


பைரவர் உருவான புராணக்கதை:அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான் அவர்களை இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.தேவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட 8 பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.அதன்படி,

 

 1. அசிதாங்க பைரவர்-பிராம்மி
 2. ருரு பைரவர்-மகேஸ்வரி
 3. உன்மத்த பைரவர்-வாராஹி
 4. குரோதன பைரவர்-வைஷ்ணவி
 5. சண்டபைரவர்-கவுமாரி
 6. கபால பைரவர்-இந்திராணி
 7. பீஷண பைரவர்-சாமுண்டி
 8. சம்ஹார பைரவர்-சண்டிகா 

 

ஆகியோர் அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.8 பைரவர்களும் 64 காலங்களில்,64 தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.தேவ,அசுர,மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான்.சனிக்கு வரம் தந்து,இதைச்செய்ய வைத்த சனியின் குரு பைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.தன் தமையன் எமன்,பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமான் விரும்பினார்.அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபடமுடியும்.பைரவரை வழிபாடு செய்வது எப்படி?பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி.இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் அஷ்டலட்சுமிகள் சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை  பெருக்கிக் கொள்ளுகின்றார்கள் ஆகவே அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

27 நட்சத்திரங்களுக்கும்   உரிய பைரவர் திருநாமம்

 1. அசுவினி-ஞானபைரவர்
 2. பரணி-மகாபைரவர்
 3. கார்த்திகை-அண்ணாமலை பைரவர்
 4. ரோகிணி-பிரம்ம சிரகண்டீஸ்வரர்
 5. மிருகசிரிஷம்-க்ஷேத்திரபாலர்
 6. திருவாதிரை-வடுக பைரவர்
 7. புனர்பூசம்-விஜய பைரவர்
 8. பூசம்-ஆஸின பைரவர்
 9. ஆயில்யம்-பாதாள பைரவர்
 10. மகம் -நர்த்தன பைரவர்
 11. பூரம்-பைரவர்
 12. உத்திரம்-ஜடாமண்டல பைரவர்
 13. அஸ்தம்-யோகாசன பைரவர்
 14. சித்திரை-சக்கரபைரவர்
 15. சுவாதி-ஜடாமுனி பைரவர்
 16. விசாகம்-கோட்டை பைரவர்
 17. அனுஷம்-சொர்ண பைரவர்
 18. கேட்டை-கதாயுத பைரவர்
 19. மூலம்-சட்டைநாதர்
 20. பூராடம்-வீரபைரவர்
 21. உத்திராடம்-முத்தலைவேல் வடுகர்
 22. அவிட்டம்-பலிபீடமூர்த்தி
 23. திருவோணம்-மார்த்தாண்ட பைரவர்
 24. சதயம்-சர்ப்ப பைரவர்
 25. பூரட்டாதி-அஷ்டபுஜபைரவர்
 26. உத்திரட்டாதி-வெண்கலஓசை பைரவர்
 27. ரேவதி-சம்ஹார பைரவர்

 

 

 

பைரவரை வணங்கி அவர்தம் அருள் பெருக.ஓம் ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷண பைரவர் நமஹ.ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷண பைரவர் பீடம் அறக்கட்டளை. அவல்பூந்துறை , ஈரோடு.
 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Foundation Gallery
Foundation Gallery
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...