Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
இல்லற தர்மம்
Bairava News

இல்லற தர்மம்

அந்தணனே! உன் குறை என்ன? என்று விசாரித்தான் மன்னன் உத்தாமன். அரசே! நான் தர்ப்பை பறிக்கப் போயிருந்த சமயம் என் மனைவியை ஒரு அரக்கன் கவர்ந்து சென்று விட்டான். அவளைக் காப்பாற்றித் தர வேண்டும் என்று பணிவுடன் வேண்டினார் வேதியர். உன் மனைவி அத்தனை ரூபவதியா? என வேந்தன் கேட்க, இல்லை அரசே! என் மனைவி கருப்பாக, குட்டையாக, ஒரு கண் சிறுத்தும், ஒரு கண் உருட்டு விழியாகவும், விரிந்த நாசியும், கோரைத் தலை முடியுமாகத்தான் இருப்பாள் என்றார் அந்தணர். இப்படிப்பட்ட ஒருத்தி காணாமல் போனதே உன் நல்ல காலம்தான்! அழகான வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஆனந்தமாக வாழ் என்றான் அரசன். தப்பு மன்னவா! அக்னி சாட்சியாய் மணந்த பெண்ணைக் கைவிடுவது மறுபிறவியில் காராக்கிரகத்தில் தள்ளும் என அந்தணர் கூற, மன்னனுக்கு சுருக் கென்றானது.

அரசி பகுணா தன்னை மதிக்கவில்லை என்று அவளை காட்டுக்குத் துரத்தி விட்டிருந்தான் மன்னன். சரி! வனத்தில் ஒரு ரிஷியிடம்தான் நான் இதுபோன்ற சிக்கலான விஷயங்களுக்கு யோசனை கேட்பேன் என்று அந்தணருடன் ரிஷிரியிடம் சென்றான் மன்னன் மன்னரும், அந்தணரும் ரிஷியை வணங்க, அர்க்கியப் பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்தான் சிஷ்யன். ஆனால், ரிஷி அரசனுக்கு அர்க்கியம் தரவில்லை!

மன்னன் காரணம் கேட்க, தவறு செய்யும் துணைவிக்கு எடுத்துச் சொல்லிப் புரிய வைக்காமல் பிரஷ்டம் செய்த நீ அர்க்கியம் பெறும் தகுதியை இழந்து விட்டாய் எனக் கூறினார் முனிவர். அதற்கும் பிராயச்சித்தம் செய்யவே வந்திருக்கிறேன். முதலில் இந்த பிராமணரின் மனைவி எங்கிருக்கிறார் என்று சொல்ல வேண்டும் என்று மன்னன் பணிவுடன் கேட்க, பாவகாசுரன் இருக்குமிடத்தை தெரிவித்தார் ரிஷி. அங்கு சென்ற அரசனை வரவேற்றான் அரக்கன். பாவகா! பசிக்கா இவர் மனைவியைக் கவர்ந்து வந்தாய்? என்று வினவினான் அரசன். இல்லை மன்னவா! இந்த வேதியர் இலக்கணம் பிசகாமல் ஹோமம் செய்து வருவதால் எங்கள் இனத்தவரால் அவ்வனத்தில் வாழ முடியவில்லை. இவர் மனைவியைப் பிரித்து விட்டால் சாஸ்திர நியதி வழுவாமல் யக்ஞம் செய்தாலும் பலன் இருக்காது என்று அவளைத் தூக்கி வந்தேன் என்றான் பாவகன்.பாவகா, கிழக்கே இருக்கும் வனத்தில் உன் கூட்டத்தோடு வாழ்ந்துகொள். தம்பதிகளைப் பிரித்தால் மறுபிறவியில் உன் துணையை உன்னிடமிருந்து பிரிப்பார் இறைவன் என்று அரசன் கூற, அந்தணரிடம் அவர் மனைவியை ஒப்படைத்தான் அரக்கன். அந்தணரே! இப்படிப்பட்ட பெண்ணை மனைவியாய் ஏற்க எப்படி மனம் ஒப்பியது? என்று அரசன் வியக்க, மன்னா! எங்கள் குடும்பத்தில் பதினாறு பேர். தாய் இறந்து விட்டாள். வயிறார சாப்பிட வசதி இல்லை. என் மாமனார் இரக்கப்பட்டு எங்களைப் பராமரித்து வேதமும் கற்றுக் கொடுத்தார். இவளுக்கு மணமாக வில்லையே என அவர் தினமும் துக்கிப்பதை என்னால் காணச் சகிக்கவில்லை. முதுமை வந்தால் அழகு போய்விடும். இவள், வெளி அழகில்லையே தவிர, குணம் சுந்தரமானது என்று சிலாகித்தபடி மனைவியுடன் விடைபெற்றார் அந்தணர். மன்னன், முனிவரிடம் பகுணா இருக்குமிடத்தைக் கேட்டான். வேந்தே! பட்டத்தரசியை கபோதன் என்ற அரவரசன் கண்டு மோகித்து பாதாள லோகம் கொண்டு சென்று விட்டான். கபோதனின் மனைவியும், மகளும் பகுணாவின் கற்புக்கு பின்னம் வராதபடி காப்பாற்றி வைத்திருக்கின்றனர். பாவகதனை அனுப்பி அரசியை மீட்டுவரச் சொல் என உத்தரவிட்டார். ரிஷி கூறியபடி நடந்து, பகுணாவோடு இல்லற தர்மத்தைக் கடைபிடித்து நிறைவாக வாழ்ந்தான் மன்னன் உத்தாமன்

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Temple Photos
Temple Photos
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...