Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
வாழ்வை சிறப்பாக்கும் கோமாதா விரத பூஜை
Bairava News

வாழ்வை சிறப்பாக்கும் கோமாதா விரத பூஜை
ஒவ்வொரு பூஜைக்கு முன்னரும், விக்னேஸ்வர பூஜை செய்வது அவசியம். புது மஞ்சளை அரைத்து அதனை பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். மகர சங்கராந்தியின் சூரிய பூஜை மிக சிறப்பான பலனை தரும். ராமர் தினமும் காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹருத்ய ஸ்தோத்திரம் கூறி சூரியனை வழிபட்டார்.
அதன் பயனாக அவர் ராவணனை அழித்தார். பாண்டவர்கள் சூரிய வழிபாடு செய்து அட்சயபாத்திரத்தை பெற்றனர். சூரிய வழிபாடு அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும். பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல். அன்று கோபூஜை செய்ய வேண்டும். பசுவை வணங்குவது பெரும் புண்ணியத்தை தரும்.
‘எல்லா உபநிஷத்துக்களும் பசுக்கள்’ என்று கீதையில் கண்ணன் கூறுகிறார். பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், இதர தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும் ஆட்சி செய்வதாக, வேதநூல்கள் தெரிவிக்கின்றன. பசுவை பெற்ற தாய்க்கு இணையாக பசுத்தாய் என்றும் கோமாதா என்றும் அழைத்து மகிழ்கிறோம்.
பசுவின் பாலினாலும், நெய்யினாலும் யாகங்கள் செய்யப்படுகின்றன. இதனால் மழை பெய்கிறது. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். கோமாதா பூஜை செய்யும் போது பசுவை முன்புறமாக, தரிசிப்பதை விட பின்புறம் தரிசிப்பது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும் போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து மலர் அணிவித்து வழிபட வேண்டும்.
பசுவின் சாணமும், லட்சுமி அம்சமாகும். எனவே தான் அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும். கோமாதா பூஜையின் போது முதலில் பசுவை அழைத்து வந்து அதன் மீது பன்னீர் தெளிக்க வேண்டும். பின்னர் பசுவின் நெற்றியில் மஞ்சள், குங்குமம், பொட்டு வைக்க வேண்டும்.
பசுவின் கழுத்தில் மாலை அணிவித்து, புடவை, ரவிக்கை சாத்தி, அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல், பழவகைகள் போன்றவற்றை ஆகாரமாகத்தர வேண்டும். நெய்விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும். கோமாதா 108 போற்றியை விரதமிருந்து பக்தியுடன் சொல்ல வேண்டும்.
மீண்டும் ஒருமுறை நெய்தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு 3 முறை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும். வீட்டில் பசு இல்லாதவர்கள் தினமும் ஏதாவது ஒரு பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம் ஆகியவற்றை தீவனமாக கொடுத்தாலும் கோ பூஜை செய்த பலன் கிடைக்கும்.
கோபூஜையின் போது தாயை கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும். வெளியில் மேய்ந்து வரும் கோமாதாக்களுக்கு வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி வைக்கலாம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகத்தில் இருந்து அருள்புரிவதாக ஐதீகம். பசுவைத்தெய்வமாக விரதமிருந்து வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.
வீட்டில் கோபூஜை நடத்த முடியாதவர்கள் அருகில் உள்ள பசுபராமரிப்பு இடங்களிலும், வழிபாட்டிலும் கலந்து கொள்ளலாம். தினமும் பூஜை செய்ய முடியாவிட்டால் வெள்ளிக் கிழமைதோறும் விரதமிருந்து பூஜை செய்ய வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் கோபூஜைகளில் கலந்து கொள்ளலாம்.
Read more: http://www.penmai.com/forums/festivals-traditions/86060-gomatha-pooja-3016-a.html#ixzz3yKR5Pzrz

இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Yoga Photo's Part - 1
Yoga Photo's Part - 1
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...