Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
💥💥சங்கடஹர சதுர்த்தி
Bairava News

💥💥சங்கடஹர சதுர்த்தி💥💥

 

இன்று!

ஸ்ரீ சார்வரி வருடம், ஆனி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 16ம் தேதி, 8.7.2020 புதன்கிழமை

சங்கடஹர சதுர்த்தி. எனவே இந்தநாளில், மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்!!!

சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி விசேஷம்!

முருகப்பெருமானுக்கு மாதந்தோறும் சஷ்டியும் கார்த்திகையும் சிறப்பு வாய்ந்தது!

பெருமாளுக்கு ஏகாதசியும் மகத்துவம் வாய்ந்தது!

அதேபோல், விநாயகப் பெருமானை வழிபட சங்கடஹர சதுர்த்தி நாள் மிக முக்கியமானதொரு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி நாளில், காலையில் இருந்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம். அப்போது, பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது!!

இன்று சங்கடஹர சதுர்த்தியில், மாலை 4.30 முதல் 6 மணி வரை விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெறும். இந்த 4.30 முதல் 6 மணி வரை என்பது, ஞாயிற்றுக்கிழமையைப் பொருத்தவரை, ராகுகால நேரம். எனவே, ஞாயிறன்று வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி, ரொம்பவே கூடுதல் பலன்களை வழங்கக் கூடியது என்பார்கள்!!

இன்றைய தினம், (புதன்கிழமை) சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் ஆலயம் செல்லுங்கள். ஆனைமுகனை வணங்குங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்கி வழிபடுங்கள்.
உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான்!!!

ஸ்ரீ கஜமுக பாத நமஸ்தே...

" கெளரி நந்தன கஜமுக வதனா
கருணைக்கடலே மகாகணபதியே
கலையா கல்வி கனிந்தே அருள்வாய்
எழுந்தருள்வாய் சித்தி புத்தி கணபதியே ....
ஆற்றங்கரைதனில் உறை ஆனைமுகா
ஆறுமுகன் வேலன் தவத் தமையோனே
அறுபத்து நான்கு கலையும் அருள்வாய்
எழுந்தருள்வாய் சித்தி புத்தி கணபதியே ....
மூஷிக வாஹன மூலப்பொருளே
மூவுலகமும் தொழுதிடும் கஜமுகனே
எதிலும் தடையின்றி ஜெயம் அருள
எழுந்தருள்வாய் விக்ன விநாயகனே !! "

கணபதி சரணம்🙏

 விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
School Function 2010
School Function 2010
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...