Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
விடாத சனி விட்டதெப்படி?
Bairava News

 

விடாத சனி விட்டதெப்படி?
திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தைநிலைநாட்ட பகவான் விஷ்ணு இராமராகஅவதரித்த போது, அவருக்கு உதவிசெய்வதற்காக அனுமனாகச் சிவபெருமான்அவதாரம் எடுத்தார். மீண்டும் ஒருமுறை பீடிக்கமுயன்ற சம்பவம் இராமாயணத்தில்காணப்படுகிறது.
இராவணனை அழிக்க வானரப் படைகளுடன்இலங்கை செல்வதற்காகக் கடலில் பாலம்அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்ராமன்.
இந்த சேதுபாலம் அமைக்கும் பணியில் சுக்ரீவன்,அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானரப்படைகள் ஈடுபட்டிருந்தன. வானரம்ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறுமரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்துகடலில் வீசிக்கொண்டிருந்தன.
இராமர், லட்சுமணர் ஆகியோர் கடலில் பாலம்உருவாவதை நோக்கிய வண்ணம்எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து,அவற்றின் மீது 'ஜெய் ஸ்ரீராம்’ என்றஅட்சரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி,இராம லட்சுமணர்களை வணங்கியபடி, "பிரபு!அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம்தொடங்குகிறது. என்னைத் தவறாகஎண்ணாதீர்கள். என் கடமையைச் செய்யஅனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.
"எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்.அதுபோல உங்கள் கடமையை நீங்கள்செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப்பாருங்கள்" என்றார் ராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, "ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போதுஉனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப்பீடித்து ஆட்டிப் படைக்க, உன் உடலில் ஓர் இடம்கொடு" என்றார்.
"சனீஸ்வரா! இராவணனின் சிறையில் இருக்கும்சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கைசெல்லவே இந்த சேதுபாலப் பணியை ஸ்ரீராமசேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக்கொண்டிருக்கிறோம்.
இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம்வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமேதாங்கள் வியாபித்துக் கொள்ளலாம்" என்றான்அனுமன்.
"ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த காலஅளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது.உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கி விட்டது.உடனடியாகச் சொல்;
உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?"என்று கேட்டார் சனீஸ்வரன்.
"என் கைகள் இராம வேலையில் ஈடுபட்டுள்ளது.அதனால், அங்கே இடம் தர முடியாது. என்கால்களில் இடம் தந்தால், அது பெரும்அவமதிப்பாகும். "நீங்கள் என் தலை மீது அமர்ந்துதங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்றுகூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீதுஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.
அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கி வந்தஅனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு,மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்துஎடுத்துத் தலைமீது வைத்துக் கொண்டு, கடலைநோக்கி நடந்து, பாறைகளைக் கடலில் வீசினார்.
பெரிய பெரிய பாறைகளின் பாரத்தைஅனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீதுஅமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.
அதனால், சனீஸ்வரனுக்கேக் கொஞ்சம் பயம்வந்துவிட்டது. "ஏழரைச் சனியில் அடுத்தவரைஅவதிப்படுத்த வந்து நாமே அவதிப்படவேண்டியதாகி விட்டதே...?" என்று யோசித்தார்.
அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனதுதலையிலிருந்து கீழே குதித்தார்.
"சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப்பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவுசீக்கிரம் விட்டு விட்டீர்கள்?" என்று கேட்டார்அனுமன்.
அதற்கு சனீஸ்வரன், "ஆஞ்சநேயா! உன்னை ஒருசில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச்சுமந்து சேதுபாலப் பணியில் ஈடுபட்டுப்புண்ணியம் பெற்றேன்.
சிவபெருமானின் அம்சமான தங்களைக் கடந்தயுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று,வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்விஅடைந்து விட்டேன்" என்றார் சனீஸ்வரன்.
"இல்லை, இல்லை... இப்போதும் தாங்களேவென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில்ஏழரை நிமிடங்களாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?" என்றார் அனுமான்.
அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், "அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மைசெய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்னவேண்டும் கேள்" என்றார்.
"இராம நாமத்தை பக்தியுடன் பாராயணம்செய்பவர்களை உங்களது ஏழரைச் சனிகாலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்கள்காத்தருள வேண்டும்" என வரம் கேட்டார்அனுமன்.
சனியும் வரம் தந்து அருளினார்.
இதனால் சனி பீடித்திருக்கும் காலத்தில்அனுமனை வணங்கி இராம பாராயணம்செய்பவர்களுக்கு சனியால் ஏற்படும் தொல்லைகுறையும் என்று நம்பப்படுகிறது
இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!"
பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள். வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.
போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது. இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி, 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.
அந்த பாஷாணக் கலவையில் லிங்கம், செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு, எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை. அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்
பாகவே இருக்கிறது. அத்தனை பேரும் எந்த அளவுக்குச் சித்தி பெற்று பிராணாயாமத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்!
பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத் திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள். மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை, ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும் இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும், அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது. முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.
மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர். ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை, பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை! அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான்!
இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை என்பது இதில் நிரூபணமானது!
"அதிசய சித்தர் போகர்' என்ற நூலில்.

விடாத சனி விட்டதெப்படி?


திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தைநிலைநாட்ட பகவான் விஷ்ணு இராமராகஅவதரித்த போது, அவருக்கு உதவிசெய்வதற்காக அனுமனாகச் சிவபெருமான்அவதாரம் எடுத்தார். மீண்டும் ஒருமுறை
 சனி பீடிக்கமுயன்ற சம்பவம் இராமாயணத்தில்காணப்படுகிறது.

இராவணனை அழிக்க வானரப் படைகளுடன்இலங்கை செல்வதற்காகக் கடலில் பாலம்அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்ராமன்.இந்த சேதுபாலம் அமைக்கும் பணியில் சுக்ரீவன்,அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானரப்படைகள் ஈடுபட்டிருந்தன. வானரம்ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறுமரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்துகடலில் வீசிக்கொண்டிருந்தன.

இராமர், லட்சுமணர் ஆகியோர் கடலில் பாலம்உருவாவதை நோக்கிய வண்ணம்எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து,அவற்றின் மீது 'ஜெய் ஸ்ரீராம்’ என்றஅட்சரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி,இராம லட்சுமணர்களை வணங்கியபடி, "பிரபு!அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம்தொடங்குகிறது. என்னைத் தவறாகஎண்ணாதீர்கள். என் கடமையைச் செய்யஅனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்."எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்.அதுபோல உங்கள் கடமையை நீங்கள்செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப்பாருங்கள்" என்றார் ராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, "ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போதுஉனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப்பீடித்து ஆட்டிப் படைக்க, உன் உடலில் ஓர் இடம்கொடு" என்றார்."சனீஸ்வரா! இராவணனின் சிறையில் இருக்கும்சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கைசெல்லவே இந்த சேதுபாலப் பணியை ஸ்ரீராமசேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக்கொண்டிருக்கிறோம்.இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம்வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமேதாங்கள் வியாபித்துக் கொள்ளலாம்" என்றான்அனுமன்.

"ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த காலஅளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது.உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கி விட்டது.உடனடியாகச் சொல்;உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?"என்று கேட்டார் சனீஸ்வரன்."என் கைகள் இராம வேலையில் ஈடுபட்டுள்ளது.அதனால், அங்கே இடம் தர முடியாது. என்கால்களில் இடம் தந்தால், அது பெரும்அவமதிப்பாகும். "நீங்கள் என் தலை மீது அமர்ந்துதங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்றுகூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீதுஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கி வந்தஅனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு,மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்துஎடுத்துத் தலைமீது வைத்துக் கொண்டு, கடலைநோக்கி நடந்து, பாறைகளைக் கடலில் வீசினார்.

பெரிய பெரிய பாறைகளின் பாரத்தைஅனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீதுஅமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.அதனால், சனீஸ்வரனுக்கேக் கொஞ்சம் பயம்வந்துவிட்டது. "ஏழரைச் சனியில் அடுத்தவரைஅவதிப்படுத்த வந்து நாமே அவதிப்படவேண்டியதாகி விட்டதே...?" என்று யோசித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனதுதலையிலிருந்து கீழே குதித்தார்."சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப்பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவுசீக்கிரம் விட்டு விட்டீர்கள்?" என்று கேட்டார்அனுமன்.அதற்கு சனீஸ்வரன், "ஆஞ்சநேயா! உன்னை ஒருசில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச்சுமந்து சேதுபாலப் பணியில் ஈடுபட்டுப்புண்ணியம் பெற்றேன்.சிவபெருமானின் அம்சமான தங்களைக் கடந்தயுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று,வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்விஅடைந்து விட்டேன்" என்றார் சனீஸ்வரன்."இல்லை, இல்லை... இப்போதும் தாங்களேவென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில்ஏழரை நிமிடங்களாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?" என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், "அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மைசெய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்னவேண்டும் கேள்" என்றார்."இராம நாமத்தை பக்தியுடன் பாராயணம்செய்பவர்களை உங்களது ஏழரைச் சனிகாலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்கள்காத்தருள வேண்டும்" என வரம் கேட்டார்அனுமன்.சனியும் வரம் தந்து அருளினார்.இதனால் சனி பீடித்திருக்கும் காலத்தில்அனுமனை வணங்கி இராம பாராயணம்செய்பவர்களுக்கு சனியால் ஏற்படும் தொல்லைகுறையும் என்று நம்பப்படுகிறது.

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Swamiji Blessings
Swamiji Blessings
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...