Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
ஸ்ரீ வாராஹி மாலை !!
Bairava News

 

ஸ்ரீ வாராஹி மாலை !!
 
1 வசீகரணம் (த்யானம்) :
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே
2 காட்சி (யந்த்ர ஆவாஹனம்) :
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே
3 பகை தடுப்பு (பிரதாபம்) :
மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப் பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத் தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே
4 மயக்கு (தண்டினி த்யானம்) :
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே
5 வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்) :
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே
6 உச்சாடனம் (ரோகஹரம்) :
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பை செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே
7 எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்) :
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என ஏழை நெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே
8 பெரு வச்யம் (திரிகால ஞானம்) :
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே
9 பகைமுடிப்பு (வித்வேஷணம்) :
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே
10 வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்) :
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதும் பொறிபட்டதோ ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே
11 தேவி வருகை (பூத பந்தனம்) :
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே
12 ஆத்ம பூஜை (மஹாமாரி பூஜனம்) :
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
13 தேவி தாபனம் (பில்லி மாரணம்) :
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே
14 மந்திர பூஜை (முனிமாரணம்) :
மதுமாம்ஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் நாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த்தெய்வமே
15 வாராஹி அமர்தல் (மூர்த்தி த்யானம்) :
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16 வரம் பொழிதல் (எதிரி மாரணம்) :
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே
17 வாழ்த்துதல் (உலக மாரணம்) :
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே
18 நன்னீர் வழங்கல் (ஏவர் பந்தனம்) :
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்கா தவர்க்கே
19 புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்) :
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கயாள் எங்கள் அம்பிகையே
20 மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்) :
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே
21 தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்) :
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள் என்னை வாழ்விக்கவே
22 தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்) :
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
23 புகழ்சொற் பாமாலை (மௌனானந்த யோகம்) :
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ ? அடல் ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே
24 படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்) :
உலக்கை கலப்பை ஓளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே
25 பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்) :
தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே
26 படை நேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்) :
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுலகம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே
27 அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்) :
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே
28 திருப்படை வந்தம் (அம்ருதானந்த யோகம்) :
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக்கு வால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே
29 பாதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்) :
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ ? நின் அடியவர்பால்
மாரிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே
30 ஸித்தி வந்தனம் (ஆனந்த யோகம்) :
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே
31 நவகோண வந்தனம் ( நித்யானந்த யோகம்) :
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே
32 நிறைமங்கலம் ( சிவஞான யோகம்) :
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே

ஸ்ரீ வாராஹி மாலை !!

 1 வசீகரணம் (த்யானம்) :
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லிமரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே
2 காட்சி (யந்த்ர ஆவாஹனம்) :
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்துஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவேஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே
3 பகை தடுப்பு (பிரதாபம்) :
மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டுகைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறிவச்சிரத் தந்த முகப் பணியாற் குத்தி வாய்கடித்துப்பச்சிரத் தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே
4 மயக்கு (தண்டினி த்யானம்) :
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமைஅடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதிகுடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே
5 வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்) :
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே
6 உச்சாடனம் (ரோகஹரம்) :
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரைநோய்க்குலம் என்ன இடும்பை செய்வார்தலை நொய்தழித்துப்பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரைநாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே
7 எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்) :
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்வீசப்படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என ஏழை நெஞ்சேவாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே
8 பெரு வச்யம் (திரிகால ஞானம்) :
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமேஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னிமாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே
9 பகைமுடிப்பு (வித்வேஷணம்) :
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே
10 வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்) :
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்பூப்பட்டதும் பொறிபட்டதோ ? நின்னை யேபுகழ்ந்துகூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ ? அண்ட கோளமட்டும்தீப்பட்ட தோ ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே
11 தேவி வருகை (பூத பந்தனம்) :
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்துபொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே
12 ஆத்ம பூஜை (மஹாமாரி பூஜனம்) :
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றேஇத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவேநித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
13 தேவி தாபனம் (பில்லி மாரணம்) :
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்திநஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்குவஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே
14 மந்திர பூஜை (முனிமாரணம்) :
மதுமாம்ஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்துவிதிர் நாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த்தெய்வமே
15 வாராஹி அமர்தல் (மூர்த்தி த்யானம்) :
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சைமெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரேவையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16 வரம் பொழிதல் (எதிரி மாரணம்) :
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே
17 வாழ்த்துதல் (உலக மாரணம்) :
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே
18 நன்னீர் வழங்கல் (ஏவர் பந்தனம்) :
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்கா தவர்க்கே
19 புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்) :
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமைஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்ஆடகக் கும்ப இணைக் கொங்கயாள் எங்கள் அம்பிகையே
20 மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்) :
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்துதீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே
21 தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்) :
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்உடலும்கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்வாராஹி வந்து குடிஇருந்தாள் என்னை வாழ்விக்கவே
22 தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்) :
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலைநெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலைஉரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
23 புகழ்சொற் பாமாலை (மௌனானந்த யோகம்) :
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடுயாரா கிலும்நமக் காற்றுவரோ ? அடல் ஆழி உண்டுகாரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டுவாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே
24 படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்) :
உலக்கை கலப்பை ஓளிவிடு வாள்கட காழிசங்கம்வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே
25 பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்) :
தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரைநெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே
26 படை நேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்) :
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்கொலைபட் டுலகம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே
27 அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்) :
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தேஅந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே
28 திருப்படை வந்தம் (அம்ருதானந்த யோகம்) :
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்றமருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரைநெருப்புக்கு வால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே
29 பாதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்) :
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்துநீறிட் டவர்க்கு வினைவரு மோ ? நின் அடியவர்பால்மாரிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇருகூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே
30 ஸித்தி வந்தனம் (ஆனந்த யோகம்) :
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னேஸரியாக நின்று தருக்கம்செய் மூடர் தலையை வெட்டிஎரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே
31 நவகோண வந்தனம் ( நித்யானந்த யோகம்) :
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்றுகாத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே
32 நிறைமங்கலம் ( சிவஞான யோகம்) :
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரைஅவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்குநலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
HIV Childs
HIV Childs
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...